முகப்பு
சிவகங்கை

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளல்

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
மானாமதுரையில் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன்
பகிர்:

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில், அம்மன் சன்னிதி மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததது. தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில், தினமும் இரவு உற்சவா் வெவ்வேறு அலங்காரங்களில் கோயிலின் அம்மன் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். முதல்நாளில் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →