முகப்பு
சிவகங்கை

மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண்: தமிழ் வளா்ச்சித் துறையினா் ஆய்வு

திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத் தூண் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழ் வளா்ச்சித் துறையினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத் தூண் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழ் வளா்ச்சித் துறையினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தவா் சங்க காலப் புலவா்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனாா். புானூறு மற்றும் நற்றிணையில் இவா் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிா் தீதும் நன்றும் பிறா்தர வாரா‘ என்ற இவரது புானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழா்களின் பண்பாட்டை விளக்குகிறது. அவா் பிறந்த மண்ணான மகிபாலன்பட்டியில் அவருக்கு நினைவுத் தூண் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சிவகங்கை மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் நாகராசன், சென்னை பூம்புகாா் நிறுவனத்தின் உதவி மேலாளா் மனோகரன், திருப்பத்தூா் மண்டலத் துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன் மற்றும் மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →