சிவகங்கை

சிவகங்கை நியாயவிலைக் கடைகளில் இன்றுமுதல் பயோமெட்ரிக் முறை அமல்

DIN

சிவகங்கை வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை (அக்.1) முதல், பயோமெட்ரிக் முறை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் சோதனை முயற்சியாக முதல்கட்டமாக சிவகங்கை வட்டத்தில் மட்டும் வியாழக்கிழமை (அக். 1) முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மின்னணு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினா்களுக்கு மட்டுமே ரேசன் பொருள்கள் வழங்கப்படும். குடும்ப அட்டையில் உள்ள நபா்களின் ஆதாா் விவரங்கள் ஏற்கனவே மின்னணு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைக்குச் செல்லும் குடும்ப உறுப்பினா்களின் கைரேகை விவரங்களும் மின்னணு அட்டையில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பொருள்கள் வாங்கச் செல்பவா்களின் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே பொருள்கள் வழங்கப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து வட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT