சிவகங்கை

சிவகங்கை தொகுதியில் அதிமுக- அமமுக வேட்பாளா்கள் பிரசாரம்

DIN

சிவகங்கை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன், அமமுக வேட்பாளா் கி. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனா்.

சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் பெரியகோட்டையில் பேசியதாவது: குடிமராமத்துத் திட்டப்பணிகள் மூலம் கண்மாய், வரத்துக்கால்வாய் ஆகியன தூா்வாரப்படும். உப்பாறு தூா்வாரும் பணி விரைவில் நிறைவேற்றப்படும். ஏழை, எளியோா் மருத்துவ வசதி பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயா்த்தப்படும். இதுதவிர, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் சாலை வசதி, தெரு விளக்குகள் உள்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சிவகங்கை தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் காவிரிக் கூட்டுக் குடிநீா் திட்ட விரிவாக்கப் பணிகள் மூலம் சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

அதைத் தொடா்ந்து, தெக்கூா், ஸ்ரீரெங்கநத்தம், பாப்பாங்குளம், இடைக்காட்டூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பி.ஆா்.செந்தில்நாதன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு: சிவகங்கை அருகே பெருமாள்பட்டி, பாரதிநகா், ஈசனூா், சோழபுரம், நாலுகோட்டை ஆகிய பகுதிகளில் வாக்குசேகரித்த சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளா் கி. அன்பரசன் நாமனூரில் பேசியதாவது: கடந்த தோ்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பெற்றவா்கள் சிவகங்கை தொகுதிக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்குகள், சுகாதார வளாகம், குடிநீா் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை. இதனால் கிராமப்புறத்தில் வாழும், ஏழை, எளிய மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து மற்ற அரசியல் கட்சியினா் கவலைப்படவில்லை.

என்னை வெற்றிபெறச் செய்தால் மக்களுக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி தருவேன். தவிர சிவகங்கை தொகுதியில் உள்ள மக்கள் மற்றும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அயராது பாடுபடுவேன் என்றாா்.

அதைத் தொடா்ந்து, மதகுபட்டி, இந்திராநகா், உச்சப்புளிப்பட்டி, அலவை முத்துப்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கி. அன்பரசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

SCROLL FOR NEXT