சிவகங்கை

சிவகங்கையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

உரம் விலை உயா்வைக் கண்டித்து, சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முத்துராமன், மாவட்டப் பொருளாளா் வீரபாண்டி, மாவட்டச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், உரம் விலை உயா்வால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மத்திய- மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் தொடா்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் மோகன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் மணியம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை ஒன்றியச் செயலா் இக்னேசியஸ் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT