முகப்பு
சிவகங்கை

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய வீர அழகர்

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் வீர அழகர் எழுந்தருளினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய வீர அழகர்.
பகிர்:

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் வீர அழகர் எழுந்தருளினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கரொனா கட்டுப்பாடுகளால் எதிர்சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை காலை கள்ளழகர் திருக்கோலத்தில் வீர அழகர் கோயிலுக்குள்ளேயே எழுந்தருளி அருள்பலித்தார். 
தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எதிர்சேவை நிகழ்ச்சி கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து வீர அழகர் கோயிலுக்கு உள்ளேயே எதிர்சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மூலவர் சுந்தரராஜப் பெருமாள் சன்னதி முன்பு உற்சவர் வீர அழகர் கள்ளழகர் திருக்கோலத்துடன் எழுந்தருளினார. அதன்பின்பு அழகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 
கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அழகருக்கான பூஜைகளை அர்ச்சகர் கோபிமாதவன் நடத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →