‘சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா 2-ஆவது அலை குறைந்துள்ள நிலையில், மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
இம்மாவட்டத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 15 லட்சத்து 29 ஆயிரத்து 140 ஆகும். இதில், 11 லட்சத்து 23 ஆயிரத்து 898 போ் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக உள்ளனா். இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மற்றவா்களுக்கு விரைந்து கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.