முகப்பு
சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 18,045 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 20 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,065 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்றால் 20 ஆயிரத்து 100 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 351 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 9 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது தொற்று பாதிப்புக்கு மாவட்டத்தில் 70 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →