இளையான்குடி அருகே கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: பெண் கொலை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெண் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் பெண் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இளையான்குடி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்து மனைவி பஞ்சவர்ணம் (60). அவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயராணி குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இதையும் படிக்க | திருச்சியில் 24 மணி நேரமும் தடுப்பூசி வசதி: ஆக.27-ல் தொடக்கம்
இந்நிலையில் கிருஷ்ணாபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும் இடையே பிரச்னை உருவாகி தகராறு ஏற்பட்டது.
அப்போது சிலர் சேர்ந்து பஞ்சவர்ணத்தை கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்த அவர் அருகேயுள்ள பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பஞ்சவர்ணம் உயிரிழந்தார்.
இதையும் படிக்க | காங்கயம்: தொழிலதிபர் மகன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
இதுகுறித்து பஞ்சவர்ணம் கணவர் முத்து அளித்த புகாரில் ஜெயராணி உள்ளிட்ட 4 பேர் மீது இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.