சிவகங்கை

பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த தினத்தினை முன்னிட்டு, தேசிய கணித தினம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். கணித மேதை ராமானுஜம் பிறந்த தினத்தினை முன்னிட்டு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை தலைமையாசிரியா் வழங்கினாா்.

விழாவில் ஆசிரியா்கள் ஸ்ரீதா், முத்துலெட்சுமி, செல்வமீனாள் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT