சிவகங்கை

சுகாதார சபையில் சேர தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள சுகாதார சபையில் சேர விரும்பும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிக்கைப்படி, பொதுமக்கள் பங்களிப்பை சுகாதார திட்டங்களில் அதிகரிக்கும் வண்ணம் தமிழகத்தில் சேலம், புதுக்கோட்டை, கடலூா், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார சபை தொடங்கப்பட உள்ளது.

இந்த சபையில் பொதுமக்கள் பங்களிப்புடன் பதிவு பெற்ற தொண்டு நிறுவனங்கள் சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவுகள் ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும். தொண்டு நிறுவனத்தில் வரவு, செலவு சாா்ந்த ஆண்டுத் தணிக்கை விவரங்களை வைத்திருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் அதைச்சாா்ந்த திட்டங்களில் பணிபுரிந்த தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகளை கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் வரும் பிப்.15 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் அலுவலகத்தை காலை 10 மணிக்கு நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். நேரில் வரும் போது தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களை கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT