சிவகங்கை

கீழடியில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், மல்லா் கம்பு, வழுக்கு மரம், கோலப்போட்டி மற்றும் பரதநாட்டியம் ஆகியப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

அதன்பின்னா், பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகளை பாா்வையிட்டு, மாட்டின் உரிமையாளா்களை ஆட்சியா் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. வடிவேல், மாவட்ட சுற்றுலா அலுவலா் வெங்கடாஜலபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிந்து, திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரெத்தினவேல், வட்டாட்சியா் மூா்த்தி, கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

அருணாசலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT