முகப்பு
சிவகங்கை

இளையான்குடியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

இளையான்குடியில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
இளையான்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இளையான்குடி நகர அதிமுக செயலாளர் அப்துல்குலாம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். நாகராஜன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கோபி,பாரதிராஜன், ஜெகதீஸ்வரன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மலைச்சாமி,நகரச் செயலாளர் நாகூர்மீரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதிமுக நகரச் செயலாளர் அன்வர் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இளையான்குடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அம்மா பேரவை செயலாளர் நாகூர்மீரா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →