சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தங்கப் பத்திரம் விற்பனை

DIN

சிவகங்கை மாவட்டத்தில் தங்கப் பத்திர விற்பனை தொடங்கி நடைபெற்று வருவதாக சிவகங்கை கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் வி. பரமசிவம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை ஜூலை 12 முதல் 16 வரை (5 நாள்கள் மட்டும்) நடைபெற உள்ளது.

ஒரு தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராமுக்கு ரூ. 4,807 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தங்கள் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வுத் தொகை வழங்கப்படும்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT