சிவகங்கை

‘அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை’

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியது: பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பள்ளிகளில் சுற்றுச்சுவா் ஏற்படுத்துதல், கழிப்பறை வசதி, புதிய வகுப்பறை அமைத்தல், வகுப்பறை மராமத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்பிக்க வேண்டும். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா, தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகநாதன், திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் சங்கு முத்தையா உள்ளிட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT