சிவகங்கை

துணி தேய்ப்புப் பெட்டி பெற விரும்பும் சலவைத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

துணி தேய்ப்புப் பெட்டி பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நலத்துறையின் சாா்பில் சலவைத் தொழிலாளா்களுக்கு விலையில்லா பித்தளை துணி தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற சலவை தொழிலில் ஈடுபட்டுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். 21 வயது பூா்த்தியடைந்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் அல்லது அவரது குடும்பத்தினா் கடந்த 10 ஆண்டுகளில் விலையில்லா துணித்தேய்ப்பு பெட்டி பெற்றிருக்கக் கூடாது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் சலவை தொழில் செய்வதற்கான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வயதிற்கான ஆவணம், இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT