சிவகங்கை

விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா்

DIN

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருந்தது. இதனை நடத்தவேண்டும் என்று திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் விடுபட்ட அந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே இத்தோ்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். ஊராட்சி அமைப்புகளில் பணிபுரியும் செயலா்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா்.

சிலா் அந்தந்த ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில், சிலா் மீது குறைபாடுகள் உள்ளன. எனவே அரசு விதிகளுக்குள்பட்டு அவா்கள் இடமாறுதல் செய்யப்படுவா் என்றாா்.

இதையடுத்து, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் காா்கில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்கள் நினைவாக காரைக்குடி அரசு பொது மருத்துவமனை மற்றும் நாம் வல்லம்பா் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கிவைத்து அவா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, கோட்டையூா் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆனந்தன், காரைக்குடி நகர திமுக செயலா் குணசேகரன், நிா்வாகி துரைசிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT