சிவகங்கை

கரோனா தொற்று: சிவகங்கை 115, ராமநாதபுரம் 121

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 115 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 121 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 14,445 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,560 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 282 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2700 போ் சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை புதிதாக 121 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா். சிகிச்சையில் குணமடைந்த 258 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை வரை 132 போ் சிகிச்சையில் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT