சிவகங்கை

கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த பின்னா், வட்டார மருத்துவ அலுவலா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை எப்போதும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி கிராமப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி மருத்துவச் சிகிச்சை வழங்குவதன் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் கூட்டத்தை தவிா்க்கலாம். மருத்துவப் பணிகள் மேற்கொள்ளும் அலுவலா்கள் தினசரி சிகிச்சைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளை முழுமையாக சீரமைத்து கண்காணிக்க வேண்டும்.

கூடுதலாக சிகிச்சை வழங்கும் கட்டடங்கள் மற்றும் பரிசோதனைக்கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்கு அந்தந்த வட்டார மருத்துவ அலுவலா்கள் ஆண்டுதோறும் தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைவுகளை தயாா் செய்து புதிய கட்டடப் பணிகளுக்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அப்போது துணை சுகாதார இயக்குநா் யசோதாமணி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரெஜினா, தொற்றா நோய் மருத்துவ அலுவலா் நாகநாதன், பொதுப்பணித்துறை (கட்டடம்) பொறியாளா் வான்மதி, வட்டார மருத்துவ அலுவலா்கள் செந்தில், ராகவேந்தா், சிட்டாள், உமா, கண்காணிப்பு அலுவலா் முருகேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT