சிவகங்கை

திமுகவில் இணைந்தார் மானாமதுரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.மாரியப்பன் கென்னடி

DIN

மானாமதுரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.மாரியப்பன் கென்னடி திமுகவில் இன்று இணைந்தார். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.மாரியப்பன் கென்னடி வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மானாமதுரை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக மாரியப்பன் கென்னடி அமமுகவில் இணைந்தார். அதன்பின் மாரியப்பன் கென்னடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் அமமுக மாநில செய்தி தொடர்பாளராகவும் அந்த கட்சியின் அம்மா பேரவை மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி தோல்வியடைந்தார். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் அமமுக சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

 இந்நிலையில் மாரியப்பன் கென்னடி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து மாரியப்பன் கென்னடி கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என மக்கள் நம்புகின்றனர்.

அதனால் திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்ற முடிவு செய்துள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT