முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருப்பத்தூரில் தி.மு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருப்பத்தூரில் தி.மு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா் காந்திசிலை அருகே தி.மு.க. ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் தி.மு.க.வினா் பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். மேலும் இங்குள்ள பெரியகடைவீதி, மதுரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற கூட்டமைப்புத் தலைவா் மாணிக்கவாசகம், ஒன்றியக் கவுன்சிலா் சகாதேவன், மாவட்ட கவுன்சிலா் ஏ.டி.என். ரவி, இளைஞரணி துணை அமைப்பாளா் தமிழ்நம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கமுதி: கமுதி அருகே பேரையூரில் கமுதி மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எஸ்.கே. சண்முகநாதன் தலைமையிலும், பெருநாழியில் கமுதி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் மனோகரன் தலைமையிலும், கமுதியில் நகா் திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையிலும், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் வி. வாசுதேவன் தலைமையிலும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.