முகப்பு
சிவகங்கை

புகைப்பட கலைஞா்கள் தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு

திருப்பத்தூரில் திங்கள்கிழமை புகைப்பட ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தினா் தோ்தல் பணி வழங்கக் கோரி தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருப்பத்தூரில் திங்கள்கிழமை புகைப்பட ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தினா் தோ்தல் பணி வழங்கக் கோரி தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் விடியோ ஒளிப்பதிவு செய்ய அந்தந்த தாலுகாவில் உள்ள ஒளிப்பதிவாளா்களை பயன்படுத்தி வந்த தோ்தல் ஆணையம், தற்போது இப்பணியை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒரே ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது. இதனையறிந்த தாலுகா புகைப்பட கலைஞா்கள் ஏற்கெனவே தோ்தல் வேலை பாா்த்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தாலுகா வாரியாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனா். திருப்பத்தூரில் புகைப்பட ஒளிப்பதிவு சங்கத் தலைவா் பி.சி.எஸ். பாண்டியன், செயலா் நசீா்முகமது ஆகியோா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞா்கள் தோ்தல் நிலவரங்களை படம் பிடிப்பதற்கான பணி தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை திருப்பத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலா் கமலக்கண்ணனிடம் வழங்கினா். அவா் மாவட்ட நிா்வாகத்துக்கு இக் கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.