சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கரோனா
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி வரை 6,450 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 6,300 போ் வரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 133 போ் பலனின்றி உயிரிழந்தனா்.
இந்நிலையில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தடுப்பூசி போடும் பணி தீவிரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை வரை 4,700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவா்களில் 200 போ் 40 வயது முதல் 60 வயது வரையிலானவா்கள் என்றும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.