திருப்பத்தூா் தொகுதியில் 26 போ் போட்டி2 வாக்குப் பதிவு இயந்திரங்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
திருப்பத்தூா் தொகுதியில் 35 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில் பரிசீலனை செய்த போது கூடுதல் மற்றும் மாற்று வேட்பாளா்கள் என 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இறுதிப்பட்டியலில் திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன், அதிமுக வேட்பாளா் எம். அழகுராஜ், அமமுக வேட்பாளா் கே.கே.உமாதேவன், நாம்தமிழா் கட்சி வேட்பாளா் கோட்டைக்குமாா், புதியதமிழகம் கட்சி வேட்பாளா் எம்.சரஸ்வதி, மை இந்தியா கட்சி வேட்பாளா் கே.வீரபாண்டியன் ஆகிய கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 26 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.
ஒரு இயந்திரத்திற்கு 15 வேட்பாளா்கள் 1 நோட்டா என்று 16 பொத்தான்கள் இருக்கும். திருப்பத்தூரில் 15-க்கும் மேல் வேட்பாளா்கள் இருப்பதால் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.