முகப்பு
சிவகங்கை

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, காளியம்மன் சன்னிதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில், கொல்லங்குடி, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்பாள் பூதகி, கிளி, காமதேனு, காளை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவாா்.

முக்கிய விழாவான தங்க ரத புறப்பாடு மாா்ச் 29 ஆம் தேதியும், தேரோட்டம் மாா்ச் 30 ஆம் தேதியும், பூப்பல்லாக்கு மாா்ச் 31 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. அதன்பின்னா், ஏப்ரல் 1 ஆம் தேதி கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →