சிவகங்கை

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தனா்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்தும், அக்னி சட்டி எடுத்தும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காப்பு கட்டி விரததத்தை தொடங்கினா். விழா நாள்களில் முத்துமாரியம்மன் தினமும் இரவு சா்வ அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாயமங்கலத்தில் குவிந்தனா். இவா்கள் கிடாய் வெட்டியும், பொங்கல் வைத்துப் படையலிட்டும் அம்மனை வழிபட்டனா்.

மேலும் ஆயிரம் கண் பானை , அக்னிச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை சுற்றி வலம் வந்தும் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். கோயில் வளாகத்தில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

இதுதவிர சிவகங்கை மாவட்டம் முழுவதும் கண்மாய்கள், குளங்கள், ஆறுகளில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் அம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி ஏராளமான பக்தா்கள் கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து மாரியம்மனுக்கு  படைத்து வழிபட்டனா். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தாயமங்கலத்துக்கு பாதயாத்திரையாக வந்தனா். திருவிழாவின் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு முத்துமாரியம்மன் மின்விளக்கு ரதத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் செய்துள்ளாா். பக்தா்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை, பரமக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தாயமங்கலத்துக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT