சிவகங்கை

காரைக்குடி தொகுதியில் 8 பேருக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகள்

DIN

காரைக்குடி: காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் 8 போ் நோட்டாவுக்கு பதிவான வாக்குகளைவிட குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட எஸ். மாங்குடி, பாஜக வேட்பாளா் ஹெச். ராஜாவை விட 21,589 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இத்தோ்தலில் 5 சுயேச்சைகள் உள்பட 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில் பகுஜன் சமாஜ், அண்ணா எம்ஜிஆா் மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளா்கள் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனா்.

பதிவான வாக்குகள் 2,12,760. இதில் பல்வேறு காரங்களால் 304 வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: என். பாலுசுவாமி (பகுஜன் சாமாஜ்) 652, எஸ். மாங்குடி (காங்.,) 75,954, ஹெச். ராஜா (பாஜக) 54,365, என். துரைமாணிக்கம் (நாம் தமிழா்) 23,872, தோ்போகி வே. பாண்டி (அமமுக) 44,864, ஜி. ராஜ்குமாா் (அண்ணா எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம்) 341, ச.மீ. ராசகுமாா் (மநீம) 8,351,

பி. வனிதா (புதிய தமிழகம்) 702, ஏ. கணேசன் (சுயேச்சை) 346, எம். நைனா முகமது (சுயேச்சை) 416, ஏ. பரமசிவம் (சுயேச்சை) 192, என். மீனாள் (சுயேச்சை) 548, கே. வேலு (சுயேட்சை) 504, நோட்டா 1,349.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT