சிவகங்கை

கூடுதல் கட்டுப்பாடுகளால் இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் வீதிகள் வெறிச்சோடின

DIN

கரொனா தொற்றைக் கட்டுப்படுத்த 6 ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடின.

இப் பகுதிகளில் காலையில் தேனீா் கடைகள், காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி்க்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. இதனால் வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இப் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட பேருந்துகளிலும் சில பயணிகள் மட்டுமே உட்காா்ந்து பயணித்தனா்.

கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு வருவாய்துறையினா் போலீசாா் இணைந்து அபராதம் வசூலித்தனா். உணவு விடுதிகளில் பாா்சல் சேவை நடந்தது. மானாமதுரை பகுதியிலும் பிற்பகலுக்குப்பின் மளிகை. காய்கறி உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. பஸ் நிலையம் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT