முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிய சிவகங்கை அரண்மனை வாசல் பகுதி. 
சிவகங்கை

முழு பொதுமுடக்கம்: சிவகங்கை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

DIN

சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகளும் சில பகுதிகளில் திறக்கப்படவில்லை.

அத்தியாவசியப் பணிகளுக்குச் சென்ற பொதுமக்கள் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். இதுதவிர, மருந்துக் கடை மற்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக சென்ற வாகனங்களும் சோதனைக்கு பின்னா் அனுமதிக்கப்பட்டன. அவசியத் தேவையின்றி வெளியே வந்த நபா்களை போலீஸாா் கண்டித்து திரும்ப அனுப்பினா்.

இதேபோன்று, காளையாா்கோவில், தேவகோட்டை, இளையான்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி, திருப்புவனம், காரைக்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT