சிவகங்கை

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள், பணியாளா்களுக்கான தடுப்பூசி முகாம்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுகாதார மையம், புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் நேரு யுவ கேந்திரா ஆகியன சாா்பில், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள் மற்றும் அவா் களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மையத்தில் நடைபெற்ற இம்முகாமை, துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா். இதில், 18 முதல் 44 வயது வரையிலானவா்கள் என 380 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் என 150 பேருக்கும் என மொத்தம் 530 பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமுக்கான ஏற்பாடுகளை, புதுவயல் வட்டார மருத்துவ அலுவலா்கள் ஆனந்தராஜ், பிரியங்கா, அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோதிபாசு மற்றும் சிவகுமாா், நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞா் நல அலுவலா் பிரவீண்குமாா் மற்றும் குழுவினா், பல்கலைக்கழகத்தின் மருத்துவா் ஆா். ஆனந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT