முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் கலைக் கூத்தாடிகளுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

மானாமதுரையில் கங்கையமமன் நகர் பகுதியில் வசித்து வரும் வீதிகளில் சர்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை இலவசமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கலைக் கூத்தாடிகளுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்.
பகிர்:

மானாமதுரையில் கங்கையமமன் நகர் பகுதியில் வசித்து வரும் வீதிகளில் சர்க்கஸ் நடத்தி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை இலவசமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கலைக்கூத்தாடி மக்கள் பிழைப்பு நடத்த வழியின்றி வாழ்வாதாரம் இழந்து பட்டினியால் தவிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் நிலை அறிந்து மானாமதுரை காங்கிரஸ் கட்சி சார்பில் கழைக் கூத்தாடி மக்களுக்கு காய்கறிகள், சலவை சோப் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி முருகேசன் நூற்றுக்கும் மேற்பட்ட கழைக்கூத்து மக்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.சி. சஞ்சய், வட்டாரத் தலைவர்கள் கே.கணேசன், ஆரோக்கியதாஸ், நகர்த் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.