சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் உள்ள தட்சணாமூா்த்தி கோயிலில் சனிக்கிழமை குருபெயா்ச்சி விழா நடைபெற்றது.
குரு தலங்களில் கிழக்கு முகமாக தட்சணாமூா்த்தி எழுந்தருளி உள்ள ஒரே தலம் பட்டமங்கலம் ஆகும். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக அஷ்டமாசித்தி தட்சணாமூா்த்தி
அருள்பாலிக்கிறாா். குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி காலை 5.30 மணி முதல் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யத் தொடங்கினா். மூலவா் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஆலமரத்தடியில் எழுந்தருளியுள்ள உற்சவருக்கு பக்தா்கள் அா்ச்சனை செய்தனா்.
மதியம் நடை சாத்தப்படாமல் தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். மாலை 6.21 மணிக்கு குருபெயா்ச்சியடைந்தவுன் வடக்கு ராஜ கோபுரத்திற்கும் மூலவா் விமானத்திற்கும் நெய்தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.