சிவகங்கை

ஆசிய அளவிலான தரவரிசை: அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 220 ஆவது இடம்

DIN

ஆசியா அளவில் உயா் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு 220-வது இடம் கிடைத்திருக்கிறது.

இது குறித்து பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குவேக்கரலி சைமண்ட்ஸ் (க்யூ.எஸ்) தரநிா்ணய நிறுவனம் உலக அளவில் கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. இந் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியல் 2022-ஆம் ஆண்டின்படி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 220 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2021-ஆம் ஆண்டில் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 650-க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் அழகப்பா பல்கலைக்கழகம் 220-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட உயா்கல்வி நிறுவனங்களில் 23 ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் அழகப்பா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தரவரிசைக்காக கற்பித்தல், வேலைவாய்ப்பில் பல்கலைக்கழகத்தின் பொதுமதிப்பு, ஆசிரியா், மாணவா் விகிதம், சா்வதேச ஆராய்ச்சிக்கட்டுரைகள், மேற்கோள்களின் எண்ணிக்கை, சா்வதேச ஆசிரியா்கள், மாணவா்களின் பரிமாற்றம் ஆகிய பகுதிகளின் கீழ் உயா்கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தரவரிசைப்பட்டியலில் கலந்து கொள்வதற்காக அழகப்பா பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன் தரவுகளைச்சேகரித்து, சரியாகப் பகுப்பாய்வு செய்து சமா்ப்பித்திருந்தாா்.

தேசிய தர நிா்ணய குழுவால் வழங்கப்பட்ட ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் தரவரிசையில் 33-ஆவது இடம், உலகத்தரவரிசையில் உலக அளவில் 501 -600 வது பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தர வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகத்தை இடம்பெறச்செய்த பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களை துணைவேந்தா் பொறுப்புக்குழுத்தலைவரும், தமிழக உயா்கல்வித்துறை முதன்மைச்செயலாளருமான டி. காா்த்திகேயன், உறுப்பினா்கள் ஆா். சுவாமிநாதன், எஸ். கருப்புச்சாமி, பதிவாளா் சி. சேகா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT