இளையான்குடி: பேருந்து மோதியதில் காவலர் பலி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாழக்கிழமை மாலை பேருந்து மோதி பைக்கில் வந்த காவலர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாழக்கிழமை மாலை பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் உயிரிழந்தார்.
இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் சுரேஷ், இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து இளையான்குடி வந்தார்.
திருவேங்கடம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்து சம்பவத்தில் போலீஸ்காரர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.