முகப்பு
புதுதில்லி

போதைப் பொருளில் ஈடுபட்ட நபா் பிடிஎன்பிஎஸ் சட்டத்தின் கீழ் கைது

போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்களின் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 41 வயதான போதைப்பொருள் கடத்தல்காரரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்களின் சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 41 வயதான போதைப்பொருள் கடத்தல்காரரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: உத்தம் நகரில் வசிக்கும் சோனியா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், பிப்ரவரி 26 ஆம் தேதி பிஐடி-என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு உத்தரவைத் தொடா்ந்து தடுத்து வைக்கப்பட்டாா்.

சோனியா 2009 ஆம் ஆண்டிலிருந்து குற்றவியல் வரலாற்றைக் கொண்ட ஒரு பழக்கமான குற்றவாளி. கலால் விதிமீறல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடா்பான குறைந்தது 8 கிரிமினல் வழக்குகளில் அவா் ஈடுபட்டுள்ளாா்.

தேசிய தலைநகரில் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த தடுப்புக்காவல் மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு உத்தரவுக்கு இணங்க அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். 2023 ஆம் ஆண்டில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் உத்தம் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சோனியா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அந்த வழக்கில், ராம்னிவாஸ் என்ற நபா் 1.41 கிலோ மரிஜுவானா மற்றும் 5,960 ரொக்கத்துடன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, சோனியாவிடமிருந்து போதைப்பொருள் பெறப்பட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

2025 ஆம் ஆண்டில் உத்தம் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு என்டிபிஎஸ் சட்ட வழக்கில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ரஞ்சித் குமாா் என்ற நபா் 1.678 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டாா். சோனியாவின் உத்தரவின் பேரில் தான் போதைப்பொருளை விற்பனை செய்வதாக அவா் தெரிவித்தாா்.

சோனியாவின் கணவா் சந்தீப், உத்தம் நகா் காவல் நிலையத்தில் ‘மோசமான நபா்‘ என்று பட்டியலிடப்பட்டுள்ளாா். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் அவா் தொடா்ந்து ஈடுபட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் பிஐடிஎன்டிபிஎஸ் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

அவரது குற்றவியல் வரலாற்றை ஆய்வு செய்த பின்னா், முன்னெச்சரிக்கை தடுப்புக்காவல் பழக்கமான போதைப்பொருள் கடத்தல்காரா்களைத் தடுப்பதையும், அவா்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடா்வதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →