சிவகங்கை

மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி 3ஆவது சனி உற்சவ வழிபாடு

DIN

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயில் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தின் 3 ஆவது சனி உற்சவ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. 

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை என்பது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதையொட்டி மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

அதைத்தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் முன் மண்டபத்தில் தெற்குமுகம் நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கும் மகுடம் தரித்த வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிக்கு மலர் மாலைகள், வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. 

மேலும் வீர அழகர் கோயிலின் காவல் தெய்வமான கோயில் நுழைவாயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கும் தீர்த்தக்கரை ராக்கச்சி அம்மனுக்கும் அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. புரட்டாசி மாதத்தின் 3 ஆவது சனி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வீர அழகர் கோயிலுக்கு வந்து கருப்பண சுவாமியையும் சுந்தராஜப் பெருமாளையும் வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனர்.

மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோதப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தின் சனி உற்சவ வழிபாடு நடைபெற்றது. மூலவர் தியாகராஜப் பெருமாளுக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தியாக விநோதப் பெருமாளை தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனி உற்சவ வழிபாட்டை முன்னிட்டு மானாமதுரையில் மூலவர் தியாக வினோதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பல பெருமாள் கோயில்களிலும் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா தேவி சமேத பெருமாள் கோயிலிலும் புரட்டாசி மாத சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT