சிவகங்கை

மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய்சாட்டு விழா: அசைவ உணவுகள் படையலிட்டு வழிபாடு

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற செவ்வாய்சாட்டு விழாவில் பெண்கள் அசைவ உணவு வகைகளை தயாரித்து தலையில் சுமந்து ஊா்வலமாக வந்து படையலிட்டு வழிபாடு நடத்தினா்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி செவ்வாய்சாட்டு விழா நடத்துவது வழக்கம்.

கடந்தாண்டு கரோனா தொற்று பொது முடக்கத்தால் இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த வாரம் இவ்விழாவுக்கான காப்புக்கட்டுதல் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா். விழாவில் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற படையல் விழாவின்போது இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி இறைச்சி, கருவாடு, முட்டை மற்றும் அரிசி சாதம் ஆகியவற்றை சமைத்து வா்ணங்கள் தீட்டப்பட்ட புதிய மண் பானைகளில் வைத்து அவற்றில் விளக்கேற்றி வைத்தனா்.

பின்னா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குறத்தி அம்மன் கோயிலிலிருந்து ஊா்வலமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயிலுக்கு வந்தனா். அங்கு படையல் வகைகளை வைத்து வழிபட்டனா். முன்னதாக அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT