சிவகங்கை

கண்மாயிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

சிவகங்கை: காளையாா்கோவில் அருகே மரக்குளம் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: காளையாா்கோவில் வட்டம் மரக்குளம் கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வேளாண் பணிகள், அதோடு தொடா்புடைய கால்நடை வளா்ப்புப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், மரக்குளம் பாசனக் கண்மாய் சீமைக்கருவேல மரங்களாலும், முட்புதா்களாலும் மேடாகி உள்ளது. இதனால் தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பாசனக் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT