முகப்பு
சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனத்தில் கொட்டும் மழையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு வரவேற்பு 

பசும்பொன் செல்லும் வழியில் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட

Updated On : 30 அக்டோபர், 2021 at 1:30 PM
பசும்பொன் செல்லும் வழியில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திருப்புவனத்தில் திமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:59 AM

பசும்பொன் செல்லும் வழியில் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு அந்தந்த கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர். 
பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். சிவகங்கை மாவட்ட எல்கையான திருப்புவனத்தில் திமுகவினர் திரண்டு நின்று ஸ்டாலினுக்கு சால்வைகள், பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலினுக்கு மானாமதுரை பஸ் நிலையம் எதிரே திமுகவினர் திரண்டு வரவேற்புக் கொடுத்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன் மானாமதுரை திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா,நகரச் செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ,நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர் .வி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு மானாமதுரை பஸ் நிலையம் எதிரே சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில் நாதன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு வரவேற்றனர்.


மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ் சிவசிவ ஸ்ரீதரன், நகரச் செயலாளர் விஜி.போஸ், கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகிகள் சின்னை மாரியப்பன், தெய்வேந்திரன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பசும்பொன் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மானாமதுரையில் அக்கட்சியினர் மாலைகள் சால்வைகள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மானாமதுரையில் பஸ் நிலையம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். 


இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவர் சங்கர சுப்பிரமணியம் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் வந்திருந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.கட்சியினரிடம் மாலைகள், சால்வைகளை பெற்றுக்கொண்ட அண்ணாமலை பின்னர் பசும்பொன் புறப்பட்டுச் சென்றார். மேற்கண்ட தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும்போது மானாமதுரை, திருப்புவனத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. கட்சியினர் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தவாறு தங்களது கட்சிகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.