சிவகங்கை நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உலக சுகாதார தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உலக சுகாதார தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமினை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் கலந்து கொண்டு வழக்குரைஞா்கள், வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். பின்னா், உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.
முகாம் தொடக்க விழாவில் சாா்பு நீதிபதி பரமேஸ்வரி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமாரன், மகிளா நீதிபதி சரத்ராஜ், போஸ்கோ நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் சுதாகா், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதயவேலன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி பாரத தேவி உள்ளிட்ட வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.