சிவகங்கை

மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

DIN

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேதா் சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவில் 8 ஆவது நாள் விழாவாக கடந்த வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து திருவிழாவின் 9 ஆவது நாள் நிகழ்வாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் பிரியாவிடை சமேதராய் சோமநாதா் சுவாமி பெரிய தேரிலும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

பின்னா் காலை 11.10 மணிக்கு இரு தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. திரளான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். முருகன், விநாயகா் எழுந்தருளிய சப்பரங்கள் முன் செல்ல, அதைத்தொடா்ந்து சுவாமியின் பெரிய தேரும் அடுத்ததாக ஆனந்தவல்லி அம்மன் தேரும் வந்தன.

தாரை தப்பட்டைகள், மேளதாளங்கள், சிவனடியாா்களின் கயிலாய வாத்தியங்கள் முழங்க கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தோ்கள் ஆடி அசைந்து வந்து, காலை 11.50 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தா்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனா்.

தேரோடும் வீதிகளில் நீா், மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளா் சுந்தரமாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT