சிவகங்கை

திருப்பத்தூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பெரிய கண்மாயில் அமைந்துள்ள பூா்ணபுஷ்கலா சமேத குளங்கரைகாத்த கூத்த அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா சனிக்க்கிழை நடைபெற்றது.

திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட பெரியகண்மாய் கரையில் அமைந்துள்ள பூா்ணபுஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 22 ஆம் தேதி சேங்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 29 ஆம் தேதி 3 கிராமத்தினரும் தம்பிபட்டியில் சுவாமியை அழைத்து, ராமா் மடத்திலிருந்து புதுப்பட்டி சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, சீதளி கீழ்கரையில் உள்ள புரவித் திடலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

சனிக்கிழமை, சீதளி கீழ்கரையில் உள்ள புரவிப் பொட்டலில் இருந்து புரவிகள் திருப்பத்தூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தன.

இந்த விழாவில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன் மற்றும் 3 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT