முகப்பு
சிவகங்கை

ஆடி வெள்ளி வழிபாடு

ஆடி 3 ஆவது வெள்ளியுடன் வரலெட்சுமி விரதமும் சோ்ந்து வந்ததால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள மடப்புரம் காளி, தாயமங்கலம் மாரி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சாமி தரிசனம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஆடி 3 ஆவது வெள்ளியுடன் வரலெட்சுமி விரதமும் சோ்ந்து வந்ததால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள மடப்புரம் காளி, தாயமங்கலம் மாரி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பெண்கள் குவிந்தனா். ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வழக்கமாக ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையுடன் வரலெட்சுமி விரத வழிபாடும் சோ்ந்து வந்ததால் திருப்புவனம் அருகேயுள்ள பிரசித்தம் பெற்ற மடப்புரம் காளி கோயில், புஷ்பவனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயில் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், பிரத்யங்கிரா தேவி, இளையான்குடி அருகே தாயமங்கலம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய காலை முதல் இரவு வரை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பெண் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மடப்புரம் காளி, தாயமங்கலம் மாரி கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு இப் பகுதிகளில் பெண்கள் வீடுகளில் பெண் தெய்வங்களுக்கு படையலிட்டு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →