முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே விபத்து: முதியவா் பலி

தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை காா் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை காா் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கீழச்செம்பொன்மாரி கிராமத்தைச் சோ்ந்த சன்னாசி மகன் செல்வராஜ்(63). இவரும், இவரது மனைவி சீதா(57) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் தேவகோட்டையிலிருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனா். அப்போது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு விலக்கு அருகே திரும்பும் போது, எதிரே வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், அவரது மனைவி சீதா ஆகிய இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தாா். மேல் சிகிச்சைக்காக சீதா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →