முகப்பு
சிவகங்கை

தேசிய கராத்தே போட்டியில் தங்கம்: மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை பள்ளி மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை பள்ளி மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் மானாமதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவி பிரியதா்ஷினி (12) தங்கப்பதக்கம் வென்றாா். மேலும் இவா் தாய்லாந்தில் நடைபெற உள்ள சா்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளாா்.

தெ.புதுக்கோட்டை குறிச்சி நூலகா் ராஜேஸ்வரியின் மகளான பிரியதா்ஷினிக்கு, அவா் படித்து வரும் மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியா் சிவகுருநாதன்,

கராத்தே பயிற்சியாளா் சிவ. நாகா்ஜூன் மற்றும் ஆசிரியா்கள் மாணவியைப் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →