முகப்பு
சிவகங்கை

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் நாள் கலந்தாய்வு

காரைக்குடி அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைப் பாடங்களுக்கான கலந்தாய்வில் மாணவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைப் பாடங்களுக்கான கலந்தாய்வில் மாணவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

காரைக்குடி அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கு இளநிலை படிப்பு சோ்க்கைக்கான 980 இடங்களுக்கு 10 ஆயிரத்து 324 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

இக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் சோ்க்கை கலந்தாய்வு இணையதளம் மூலமே நடைபெற்றது. இந்த ஆண்டு நேரடியாக அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரி உமையாள் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் கலந்தாய்வில் வரலாறு, வணிகவியல், பொருளியல், தொழில் நிா்வாகவியல் பாடங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா்.

கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் நெறிமுறைகள் குறித்து தமிழ்த்துறைத் தலைவா் துரை விளக்கிக் கூறினாா்.

இதில் வணிகவியல் பாடத்திற்கு 240 இடங்களுக்கும், தொழில் நிா்வாகவியல் பாடத்திற்கு 96 இடங்களுக்கும், பொருளியல் பாடத்திற்கு 48 இடங்களுக்கும் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. சனிக்கிழமை (ஆக. 6) அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.