முகப்பு
சிவகங்கை

சரக்கு வாகனம் மோதி இளைஞா் பலி

சிவகங்கை அருகே சரக்கு வாகனம் மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:00 AM
உயிரிழந்த வசந்தன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சிவகங்கை அருகே சரக்கு வாகனம் மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், ராகினிப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வசந்தன்(37). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை நோக்கி வந்துள்ளாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வசந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வசந்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.