அழகப்பா செவிலியா் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமத்தின் அழகப்பா செவிலியா் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமத்தின் அழகப்பா செவிலியா் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அதில் முக்கிய நிகழ்வாக செவிவிலியா் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி அழகப்பா பல்கலைக்கழக அலுவலகம் முன்பு தொடங்கி காரைக்குடி ரயில்நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியை அழகப்பா கல்விக் குழுமத்தின் அறங்காவலரும், கல்விக்குழுமத்தின் துணைத்தலைவருமான தேவி அலமேலு வைரவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
கல்லூரி முதல்வா் ஜூலியட்சில்வியா தலைமை வகித்தாா். பேரணியில் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியா்கள் ஏந்திச்சென்றனா். நிகழ்ச்சியில் அழகப்பாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், காவலா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.