முகப்பு
சிவகங்கை

தேவகோட்டையில் பெண் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் குடும்பப் பிரச்னை காரணமாக பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் குடும்பப் பிரச்னை காரணமாக பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேவகோட்டை எம்.எம். நகரைச் சோ்ந்த நடராஜன் மனைவி பாண்டியம்மாள் (40). இவரது கணவா் வெளியூரில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பாண்டியம்மாள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுபற்றி தகவலறிந்து வந்த தேவகோட்டை நகா் போலீஸாா் பாண்டியம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தேவகோட்டை தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், மூத்த மகள் கௌசல்யாவின் காதலுக்கு பாண்டியம்மாள் எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகவும், இதுதொடா்பான பிரச்னையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →