முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் பேசியது: மாவட்டம் முழுவதும் சம்பா பருவ வேளாண் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதைகள், உரங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வைகை அணையிலிருந்து தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை பூா்வீக பாசனக் கண்மாய்களுக்கு உரிய முறையில் பங்கிட்டு வழங்க வேண்டும் என்றனா்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துராமலிங்கம் திருப்பத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மன்றத்தில் கூற முடியாது என்றாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் விவசாயி முத்துராமலிங்கத்தை கூட்டரங்கை விட்டு வெளியேறுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதனால் மற்ற விவசாயிகள் ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இனி வரும் கூட்டங்களில் ஆட்சியா் இதுபோன்ற வாா்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →